நீ ஆர்டர் முடிக்க நாங்க தான் கெடச்சோமா?? – கடைசி நேரத்தில் பாக்கியாவை கழட்டிவிடும் அக்கம்பக்கத்தினர்!!!

0

விஜய் டிவியில் பல பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று, சமையல் ஆர்டருக்காக அண்டை வீட்டாரிடம் பாக்கியா உதவி கேட்கிறார். ஆனால் ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழிக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் 1000 பேருக்கு சமைப்பதற்காக வந்த சமையல் ஆர்டரை வீட்டில் இருப்பவர்களின் எதிர்ப்பை மீறி பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி உடன் செய்ய முடிவு செய்கிறார் பாக்கியா. இதனால் அண்டை வீட்டாரிடம் உதவி கேட்கிறார் பாக்கியா.

இந்நிலையில் இன்றைய கதையில், பாக்கியா இப்போ எனக்கு 1000 பேருக்கு சமைக்கிற ஆர்டர் வந்திருக்கு, இந்த சமையல் வேலைய ஆளுக்கு ஒண்ணா பிரிச்சு செஞ்சா இந்த ஆர்டர நான் நல்ல படியா முடிச்சுருவேன் என்று அண்டை வீட்டாரிடம் கேக்கிறார். நீ  ஆர்டர் முடிக்க நாங்க ஏன் வேலை செய்யன்னு கூட்டத்தில் இருக்கும் ஒருவர் கேட்கிறார்.

அதற்கு செல்வி ஒரு ஹெல்ப் மாதிரி தான் கேட்குறோம் என கூறுகிறார். அதுக்காக நாங்க சமைக்கிறதா? எங்க வீட்டு வேலையை எங்களால் செய்ய முடியல இதுல உனக்கு வேற வேல செய்யணுமா? என கேட்டுக்கொண்டு ஒருவர் மாத்தி ஒருவர் அங்கு இருந்து கிளம்பிவிடுகின்றனர். மேலும் அதில் ஒருவர் மட்டும் பாக்கியாவுக்கு உதவுவதாக கூறுகிறார்.

அதன் பின்னர் எழில் பாக்கியாவிடம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசுனது என்னாச்சு என கேட்க, அதற்கு பாக்கியா 3 பேருல 1 ஆள் மட்டும் ஓகே சொல்லிருக்காங்க என சொல்கிறார். அப்பொழுது எழில் அவருக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசுகிறார்.

அந்த நேரத்தில் எழிலுக்கு அமிர்தா போன் செய்து பேசுகிறார். மேலும் தானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என சொல்ல, மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் பாக்கியா. அதன் பின் பாக்கியா அழைத்ததன் பேரில் பக்கத்து வீட்டுக்கார பெண்கள் அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர்.

அவர்களிடம் ஆர்டர் பற்றி விவரிக்கிறார். அப்பொழுது கூட்டத்தில் இருக்கும் ஒருவர் நீ சமைக்க நாங்க எதுக்கு வேல செய்யனும் என கேட்க, அதற்கு எல்லாருக்கும் சேர வேண்டிய பணம் கரெக்டா அவங்கவங்களுக்கு வந்து சேந்துரும். அதன் பின்னர் எப்படி செய்யப் போறோம் என்பதை அமிர்தா மற்றும் செல்வி எடுத்து கூறிக் கொண்டிருக்கிறார்.

வழக்கம் போல பாட்டி பாக்கியாவை அனைவர் முன்னிலையில் அசிங்கப்படுத்தும் வகையில் இடை  இடையே பேசுகிறார். கூட்டத்தில் இருக்கும் சிலர் ஒருவர் மாத்தி ஒருவர் ஏதேதோ காரணம் சொல்லி கிளம்புகின்றனர்.

அதற்கு ஈஸ்வரி இது தான் வேலைக்கு ஆகாதுன்னு அன்னைக்கே சொன்னேல என நக்கலாக கூறுகிறார். இந்நிலையில் திரும்ப ஒரு பெண் மட்டும் வந்து தான் பண்ணுவதாக கூறுகிறார். இதனால் ஈஸ்வரியை தவிர  அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இதையடுத்து ராஜசேகர் வீட்டிற்கு வழக்கம் போல உணவு கொண்டு செல்கின்றனர் செல்வி மற்றும் பாக்கியா. அப்பொழுது அவர் அங்கு வேலையை பற்றி கேட்டு அட்வான்ஸ் ஏதும் வேண்டுமா? என கேட்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here