ஆப்கானிஸ்தான் பிரச்சனை சென்னையிலும் எதிரொலி – வர்த்தகம் கடும் பாதிப்பு!!

0

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ள தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா உடனான  பாதாம், பிஸ்தா ஏற்றுமதியை தடை செய்ததால் சென்னையில் பாதாம், பிஸ்தா விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்களுக்கு விதித்து வருகின்றனர். மேலும் லட்ச கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் வேறு நாடுகளுக்கு தப்பி செல்ல குடும்பத்துடன் காத்து கொண்டுள்ளனர். மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் வேறு காபூல் விமான நிலையத்தில் ஏற்படுத்திய இரட்டை குண்டுவெடிப்பால் பல அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

தாலிபான்களின் நடவடிக்கைகள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது இந்தியாவுடனான இறக்குமதி, ஏற்றுமதி உறவை முழுமையாக நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். இதன் காரணமாக, வாகா எல்லை வழியாக வழக்கமாக 200 லாரிகளில் இந்தியா வரும் உலர் பழங்கள் வரத்து நின்றுபோனது.

எனவே சென்ற ஜூலை மாதம் ஒரு கிலோ பாதாம் 650 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது 1,100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதே மாதிரி ஒரு கிலோ பிஸ்தாவின் விலை 800 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மக்களையும் வணிகர்களையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here