வெந்து தணிந்தது காடு படத்தின் புது அப்டேட்!!!

0

சிம்பு மீதான ரெட் கார்டு விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி, அந்த படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டியது. இதுவரையிலும் இல்லாத விதமாக சிம்பு முழுமையாக வேற கெட்டப்பில் வந்திருப்பார். இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இவர்கள் இருவரின் காம்போ எப்பொழுதுமே செம ஹிட் தான். சிம்புவிற்கு ரெட் கார்ட் கொடுத்ததால் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது அந்த விவகாரம் முடிவடைந்த நிலையில் பெப்ரி நிறுவனம் இந்த படத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகின்றது.ஏனெனில் வேல்ஸ் பிலிமில் இருக்கும் மாணவர்களுக்கு வருடாந்திர தொகை ஒதுக்கப்பட்டு விடும். அதனால் பெப்ரி இந்த படத்திற்கு முழு ஆதரவை அளித்துள்ளது. இப்பொழுது வெளியாகி இருக்கும் போஸ்டரும் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படத்தில் 13 பேர் ஒரே ரூமில் இருப்பது போன்றும் இதில் ஒருவராக சிம்பு இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது மக்களிடமும் ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எப்பொழுது படம் ரிலீஸ் என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here