
பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பாக்கியா படிப்படியாக தன்னை நிரூபித்து கொண்டுள்ளார். கோபி தன்னை அவமானப்படுத்தியதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறார். பாக்கியாவின் இந்த முன்னேற்றம் கோபிக்கும், ராதிகாவிற்கும் பிடிக்கவே இல்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் பாக்கியா, ராதிகா வேலை பார்க்கும் ஆபீஸிலேயே கேட்டரிங் ஆரம்பித்து விட அவரால் அதை பொறுக்கவே முடியவில்லை. ஆரம்பத்திலேயே இதனை தட்டி கழித்து விடலாம் என்று எவ்வளவோ போராடி வந்தார். இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் வைரலாகி வருகிறது.
அதாவது, ராதிகா கேட்டரிங் ஆர்டரை கெடுத்து விடுவதற்காக, பல வேலைகளை செய்ய ஆரம்பிப்பாராம். பாக்கியா மீது நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் அந்த மானேஜர் ராதிகாவை திட்டி விடுவாராம். மீண்டும் பாக்கியாவால் அசிங்கப்படும் ராதிகா வன்மத்தை வளர்த்து கொள்வாராம். இதை வைத்து தான் கதை நகருமாம். இது போன்ற காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.