ஹலோ, 100ஆ.,எங்க பள்ளியில் bomb வச்சிருக்காங்க சார்? ஒரே போன் காலில் மாவட்டத்தையே அழறவிட்ட 9ம் வகுப்பு மாணவி!!

0

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளதால் தேர்வு மைய பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தின் திருநகரில் அமைந்துள்ள பி.எம்.டி. ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக அவசர போலீஸ் எண் 100க்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து இந்த தனியார் பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் பாம் Squad அதிகாரிகள் வளாகம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முடிவில் வெடிகுண்டு எதுவும் தென்படாததால் புகார் கொடுத்த தொலைபேசி எண் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது இந்த மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி இன்று நடைபெற இருந்த புவியியல் தேர்வுக்கு தயாராகவில்லை. இதனால் தனது பாட்டியின் செல்போனில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளது.

இதனால் வெடிகுண்டு மிரட்டல் முற்றிலும் போலியானவை. எனவே பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் பயம் கொள்ள தேவையில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஒரே ஒரு போன் காலில் மொத்த மாவட்டத்தையும் கதிகலங்க வைத்த மாணவியின் காரணத்தை கேட்டு பலரும் செய்வதற்கரியாமல் திகைத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here