சில்லறை தனமாக வேலை பார்க்கும் ராதிகா.., நிம்மதி இழக்கும் பாக்கியா குடும்பம்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

0
சில்லறை தனமாக வேலை பார்க்கும் ராதிகா.., நிம்மதி இழக்கும் பாக்கியா குடும்பம்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!
சில்லறை தனமாக வேலை பார்க்கும் ராதிகா.., நிம்மதி இழக்கும் பாக்கியா குடும்பம்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது தான் பாக்யாவின் அருமை கோபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. மேலும் ராதிகாவின் டார்ச்சலால் ஒவ்வொரு நாளும் கோபி அவஸ்தைப்பட்டு வருகிறார். இன்றைய எபிசோடில் கூட இனியா ஸ்கூலில் நான் அனைத்திலும் முதலில் வருவதற்கு காரணம் என் அம்மா மட்டும் தான் என்று கூறுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை கேட்ட கோபிக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சந்தோஷப்படுகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோட்டில் கோபி பாக்யாவிடம் நன்றி சொல்வாரம். எதுக்கு என்னிடம் நன்றி சொல்றீங்க என பாக்கியா கேட்க அதற்கு கோபி இனியாவுக்கு நீ ஒரு நல்ல அம்மாவா இருக்க. அவ இவ்வளவு நல்லா படிக்கிறதுக்கு, இவ்வளவு சந்தோஷமா இருக்குறதுக்கும் நீ மட்டும் தான் காரணம் என சொல்வாராம்.

“தோனி, விராட் கோலி & ரோஹித் இவுங்க 3 பேரும் எப்பவும் இப்படித்தான் இருப்பாங்க”…, மனம் திறந்த கே எல் ராகுல்!!

இதை கேட்டு பாக்கியா மட்டும் அல்லாமல் இனியாவும் ஷாக் ஆகின்றன. ஆனா இது பிடிக்காதா ராதிகா கோபி நம்மல விட்டு போய்டுவாரு என்ற பயத்தில், இனியாவிடம் சண்டை போடுவாராம். மேலும் இந்த மெடலுக்கு தான உங்க அப்பா பாக்கியாவ பாராட்டினாரு. இது உன்னிடம் இருக்க கூடாது என பிடுங்கி விடுவாராம். இப்பொழுது தான் வீட்டில் ஓரளவுக்கு நிம்மதி இருந்து வரும் நிலையில் ராதிகா இப்படி அடிக்கடி பிரச்சனை செய்வது பலருக்கும் கஷ்டத்தை தான் கொடுக்குமாம். ஒரு பக்கம் பொறுமை காக்க முடியாத ஈஸ்வரி ராதிகாவை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புவாராம். இனி வரும் காட்சிகள் இப்படி தான் இருக்கும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here