பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக உருவாகும் காதல் ஜோடி – இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக உருவாகும் காதல் ஜோடி - இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக உருவாகும் காதல் ஜோடி - இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ச்சி.. இது ரொம்ப மோசம்.. கும் இருட்டில் கையில் சிகரெட்டுடன் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்!!

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் டிவியில் வெளியாகி தினமும் ஒரு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் தற்போது கோபி தனது தோழியான ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்கியலட்சுமிடம் விவாகரத்து பத்திரத்தில் திருட்டு தனமாக கையெழுத்து வாங்கி உள்ளார். கையெழுத்து போடு என்று சொன்னவுடன் பாக்கியலட்சுமி அந்த பத்திரத்தை ஒரு முறை கூட படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டு விட்டார். இந்த நிலையில் கோபி அடுத்தாக என்ன செய்ய போகிறார் என்று ரசிகர்கள் திகைத்து கொண்டிருக்கும் வேளையில், ராமமுர்த்திக்கு சிகிச்சை அளிக்க வரும் ரஜினி என்ற டாக்டர் நடந்து கொள்ளும் விதம் கோபியின் மகளான இனியாவுக்கு பிடித்து போய் விட்டது. அதனால் இனியா அந்த டாக்டர் வீட்டுக்கு வரும் நேரத்தை சரியாக தெரிந்து கொண்டு அவரை காண தன்னை மிகவும் அழகாக விதவிதமான முறையில் மேக்கப் செய்து அவர் வந்தவுடன் அவரிடம் சென்று பேசி பழகி வருகிறார்.

இனியா இவ்வாறு நடந்து கொள்வது ஜெனிக்கு சரியாக படவில்லை. அதனால் இனியாவை தனியாக அழைத்து சென்று டீன் ஏஜ் பருவத்தில் இதெல்லாம் வருவது சகஜம் தான் ஆனால் நம்ம தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார். அதனை கேட்ட இனியா டாக்டர் ரஜினியிடம் ஒரு நண்பரிடம் பேசுவது போல பேசி பழகுவர் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் இனியா தற்போது தான் பள்ளி படிப்பை படித்து வருவதால் அவருக்கு ஜோடி கண்டிப்பாக இருக்காது என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here