ஆம்பள, பொம்பள குரலில் மாத்தி மாத்தி பேசுறிய.., குடிபோதையில் ஈஸ்வரியை அசிங்கப்படுத்திய கோபி.., ராதிகா வால் வந்த வினை!!!

0
ஆம்பள, பொம்பள குரலில் மாத்தி மாத்தி பேசுறிய.., குடிபோதையில் ஈஸ்வரியை அசிங்கப்படுத்திய கோபி.., ராதிகா வால் வந்த வினை!!!
ஆம்பள, பொம்பள குரலில் மாத்தி மாத்தி பேசுறிய.., குடிபோதையில் ஈஸ்வரியை அசிங்கப்படுத்திய கோபி.., ராதிகா வால் வந்த வினை!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் எழில் கோபி செய்த கொடுமைகளை அமிர்தாவிடம் சொல்லி புலம்புகிறார். இனி நா அவர பத்தி கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ஈஸ்வரி கோபியை நினைத்து வருத்தப்பட, ராமமூர்த்தி என்ன ஆச்சு என்று கேட்க கோபியை கூட்டிட்டு வரலாம் என்று சொல்கிறார். அதுக்கு ராமமூர்த்தி அவன் ரோட்டுலையே கிடக்கட்டும் அப்போது தான் அவனுக்கு புத்தி வரும் என்று சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்ததாக செழியனிடன் கோபியை அழைத்து வரலாம் என்று சொல்ல அவனும் வர யோசிக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா வர ஈஸ்வரி அவரிடம் கண்கலங்க செழியனை அழைத்து வர சொல்கிறார். பின் இருவரும் செல்ல ராமமூர்த்தி பாக்கியாவிடம் கோபி பண்ணும் அட்டுழியத்தை நினைத்து வருத்தப்படுகிறார். இந்த பக்கம் கோபி எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் செழியன் அவருக்கு கால் பண்ணி கேட்க செழியனா யாருன்னு கேட்டு கோபி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதோடு கூடவே ஈஸ்வரியும் பேச என்ன ஆம்பள குரல் பொம்பள குரல்னு மாத்தி மாத்தி பேசுற என்று போதையில் நக்கலடிக்கிறார். பின் இருவரும் கோபியை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வரும் போது ராதிகா கோபிக்கு கால் பண்ணுகிறார். அப்போது கோபி போதையில் ராதிகா தான் போன் பண்ணுவா. அவ என்ன நிம்மதியா இருக்க விட மாட்ட என்கிறார். உடனே ஈஸ்வரி ராதிகாவால் தான் இவன் வாழ்க்கையே இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல, உடனே கோபி நூறு சதவீதம் கரெக்ட் என்கிறார்.

பின் கோபி போனை எடுக்காததால் ராதிகா நா வீட்டுக்கு போய் பாத்துட்டு வரேன் என்று சொல்ல அவரது அம்மா அவரை போக வேண்டாம் என்று ராதிகாவை சமாதானப்படுத்துகிறார். அடுத்ததாக போதையில் தள்ளாடி கொண்டு வீட்டுக்கு வரும் கோபியை பார்த்து ராமமூர்த்தி இது எல்லாம் பாக்குறதுக்கு போய் சேர்ந்திடலாம் என்கிறார். பின் செழியனும், எழிலும் கோபியை ரூமுக்கு கொண்டு சென்று படுக்க வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here