ச்சீ.., இப்படி கேட்க உனக்கு வெக்கமா இல்ல.., மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவை கேவலப்படுத்திய மூர்த்தி!!!

0

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் தன்னுடைய அவசர புத்தியால் வங்கி அதிகாரிகளை அடிக்க, அவர்கள் போலீசில் கம்ப்ளைன்ட் செய்கின்றனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் கதிரை அரெஸ்ட் பண்ண வீடு தேடி வருகின்றனர். இந்த பக்கம் கஸ்தூரி ஐஸ்வர்யாவை நீ எல்லாம் என்ன குடும்பம் நடத்துற. வந்த கொஞ்ச நாள்ல இவ்வளவு கடன் வாங்குவியா. இதுக்கு நீ பேசாம மூர்த்தி வீட்டிலேயே இருந்திருக்கலாம் என திட்டி தீர்க்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மற்றொரு பக்கம் கதிரை எதற்காக கைது செய்தார்கள் என்பது தெரியாமல் மூர்த்தி குடும்பத்தார் உள்ளனர். மேலும் இதுக்கு கண்ணன் ஐஸ்வர்யா தான் காரணம் என்ற விஷயம் தெரிந்தால் மூர்த்தி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடில் ஐஸ்வர்யா கஸ்தூரி பேசியதை நினைத்து தான் செய்தது தவறு என வருத்தப்படுவாராம்.

இந்த முக்கிய பிரபலத்தின் மனைவி தற்கொலை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

அதோடு மட்டுமல்லாமல் மூர்த்தி வீட்டுக்கு சென்று நான் பண்ண எல்லாமே தப்பு தான். என்ன மன்னிச்சிடுங்க என கெஞ்சுவாராம். மூர்த்தி அன்னைக்கு என்னமோ எல்லா கஷ்டத்துக்கு காரணம் நாங்க தான் சொல்லி பேசின. இப்போ இப்படி கேட்க உனக்கு வெட்கமாகவே இல்லையா என அசிங்கப்படுத்துவாராம். மேலும் இனி உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை என சொல்லி விடுவாராம். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோடில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here