IPL 2023: கடைசி கட்டத்தில் இருக்கும் மும்பை (MI) & குஜராத் (GT)…, CSK க்கு எதிராக இறுதிப் போட்டியில் மோத உள்ள அணி எது??

0
IPL 2023: கடைசி கட்டத்தில் இருக்கும் மும்பை (MI) & குஜராத் (GT)..., CSK க்கு எதிராக இறுதிப் போட்டியில் மோத உள்ள அணி எது??
IPL 2023: கடைசி கட்டத்தில் இருக்கும் மும்பை (MI) & குஜராத் (GT)..., CSK க்கு எதிராக இறுதிப் போட்டியில் மோத உள்ள அணி எது??

இந்தியாவில் 10 அணிகளை மையமாக கொண்டு நடைபெற்று வரும், ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கி உள்ளது. அதாவது, பிளே ஆப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, மற்றொரு பிளே ஆப் போட்டியில் லக்னோ அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது இன்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதில், கடந்த ஐபிஎல் சீசனில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றம் தந்தது. ஆனால், குஜராத் அணியோ தனது முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த 16 வது சீசனில் இந்த இரு அணிகளும் தற்போது, இறுதிப் போட்டியை எதிர்நோக்கி மோத உள்ளன. இதில், வெல்லும் அணி இறுதிப் போட்டியில் CSK அணியை வரும் மே 28ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

ஆம்பள, பொம்பள குரலில் மாத்தி மாத்தி பேசுறிய.., குடிபோதையில் ஈஸ்வரியை அசிங்கப்படுத்திய கோபி.., ராதிகா வால் வந்த வினை!!!

குஜராத் டைட்டன்ஸ் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

சுப்மன் கில் , ஹர்திக் பாண்டியா(சி) , டேவிட் மில்லர் , ஆர். டெவாடியா , டி. ஷனகா , விருத்திமான் சாஹா, ரஷித் கான் , முகமது ஷமி , எம்.எம்.சர்மா , நூர் அகமது, டி.ஜி. நல்கண்டே .

மும்பை இந்தியன்ஸ் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா(சி) , சூர்யகுமார் யாதவ் , டிம் டேவிட் , திலக் வர்மா , எச் ஷோக்கீன் , சி கிரீன் , பியூஷ் சாவ்லா , இஷான் கிஷன், ஜேபி பெஹ்ரன்டோர்ஃப் , சிஜே ஜோர்டான், ஆகாஷ் மண்ட்வால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here