நீங்க மாடர்ன் பாட்டின்னு நினைச்சேன்.., ஆனா இப்படி மட்டமா நடந்துக்குறீங்களே.., ஈஸ்வரியை கேலி செய்த ஜெனி !!!

0
நீங்க மாடர்ன் பாட்டின்னு நினைச்சேன்.., ஆனா இப்படி மட்டமா நடந்துக்குறீங்களே.., ஈஸ்வரியை கேலி செய்த ஜெனி !!!
நீங்க மாடர்ன் பாட்டின்னு நினைச்சேன்.., ஆனா இப்படி மட்டமா நடந்துக்குறீங்களே.., ஈஸ்வரியை கேலி செய்த ஜெனி !!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் நிலா பாப்பா விளையாடுவதை பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் சந்தோஷம் படுகின்றனர். அப்போது ஈஸ்வரி கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆயிட்டு இன்னும் எதுவும் விசேஷம் இல்லையா என்று கேட்க அனைவரும் ஷாக் ஆகி கின்றனர். இதுக்கு ஜெனி நீங்க மாடர்ன் பாட்டின்னு நினைச்சேன் ஆனா இப்படி கேக்குறீங்களே? என்கிறார். அடுத்ததாக எழில் எங்களுக்கு தான் நிலா பாப்பா இருக்காளே என்று சொல்ல என்னதான் இருந்தாலும் உனக்கு அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை பிறக்கணும் என்று ஈஸ்வரி சொல்கிறார். அடுத்ததாக அமிர்தாவை எழில் சமாதானப்படுத்துகிறார். இந்த பக்கம் பாக்கியா ஈஸ்வரியிடம் நீங்க பேசுனது தப்பு.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குழந்தை பெத்துக்குறது அவங்களோட இஷ்டம் அதை நம்ம இப்பவே சொல்ல நீ அமிர்தாவுக்கு சப்போர்ட்டுக்கு வரியா என்று ஈஸ்வரி பாக்யாவை திட்டி விடுகிறார். இதையெல்லாம் வெளியே இருந்து ராதிகா பார்த்து கொண்டிருக்கிறார். வெளியே வரும் பாக்கியாவிடம் உங்க மாமியாரே உங்கள திட்டிட்டாங்க என்று கிண்டல் அடிக்க, அதை ஈஸ்வரி கேட்டு விடுகிறார். இதனால் ராதிகாவை அசிங்கப்படுத்த பாக்கியா கிச்சனில் வேலை பார்க்கும் போது ஈஸ்வரி நீ இவ்வளவு நேரமா வேலை பார்த்தது போதாதா? இப்பவும் வேலை பார்க்கணுமா? போய் படு இதை காலையில் பார்த்துக்கொள்ளலாம். உடம்பை கெடுத்துக் காத என்று ஆதரவாக பேசுகிறார்.

FIH ப்ரோ லீக்: வெற்றி பாதைக்கு திரும்பிய இந்தியா…, பெல்ஜியம் அணியை வீழ்த்தி அசத்தல்!!

உடனே பாக்கியா பாத்தீங்களா இதான் எங்க அத்தையோட குணம். எனக்கு இந்த குடும்பத்தில் இந்த உரிமையும் பாசமும் இருக்கு அது போதும். ஆனால் உங்களுக்கு தான் எதுவுமே இல்லை என்று அவமானப்படுத்துகிறார். பின் ரூமுக்கு வரும் ராதிகா லைட் ஆப் பண்ண வேண்டாமா என்று கேட்க, நாங்க படிச்சிட்டு இருக்கோம்லா, படிப்பு தான் முக்கியம் என்று சொல்ல, ராதிகா படுத்து தூங்குவது போல நடித்து கோபியை அடிக்கிறார். வலியால் துடித்துக் கொண்டு இவ கிட்ட நல்லா மாட்டிக்கிடையே என்று சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here