FIH ப்ரோ லீக்: வெற்றி பாதைக்கு திரும்பிய இந்தியா…, பெல்ஜியம் அணியை வீழ்த்தி அசத்தல்!!

0
FIH ப்ரோ லீக்: வெற்றி பாதைக்கு திரும்பிய இந்தியா..., பெல்ஜியம் அணியை வீழ்த்தி அசத்தல்!!
FIH ப்ரோ லீக்: வெற்றி பாதைக்கு திரும்பிய இந்தியா..., பெல்ஜியம் அணியை வீழ்த்தி அசத்தல்!!

சர்வதேச இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது, 2022-2023 ஆம் ஆண்டுக்கான FIH ப்ரோ லீக் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திய இந்திய அணி, மே மாத இறுதியில் பெல்ஜியம் மற்றும் கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், நேற்று மீண்டும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இந்திய அணி மோதியது. இந்த போட்டியில், 2வது நிமிடத்திலேயே இந்தியாவின் விவேக் பிரசாத் ஒரு கோல் அடிக்க, இவரை தொடர்ந்து ஹர்மன்பிரீத் சிங் மற்றும் அமித் ரோஹிதாஸ் இரு கோல் அடித்தனர். இந்திய வீரர்கள் தொடர்ந்து கோல் அடித்து வந்த நிலையில், வில்லியம் கிஸ்லைன் 46 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி சார்பாக ஒரு கோல் அடித்தார்.

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் இந்தியாவின் தில்ப்ரீத் சிங் கோல் ஒன்றை அடித்தார். இதே நிலையை ஆட்டத்தின் இறுதி வரை தொடர்ந்ததால், இந்திய அணி 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி 22 புள்ளிகளுடன் 2 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here