தன் வருங்கால மருமகளுடன் ஹிந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாக்கியா – அப்பப்பா.., இப்போவே எப்படி ஐஸ் வைக்கிறாங்க பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ரித்திகா மற்றும் அவரது மாமியாரான பாக்கியாவும் இணைந்து சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி நடிகைகள் ரீல்ஸ்

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாக்கியாவிற்கு அவ்வளவு பெரிய அடிபட்டு எதையும் கண்டுகொள்ளாதவர்கள் கோபிக்கு சிறிய அடிபட்டதும் அவ்வளவு துடிக்கின்றனர். மேலும் கால் வலியோடு இருக்கும் பாக்கியாவை வேலை வாங்குகின்றனர்.

எழில் இதனை கண்டித்து விட்டு செல்ல அவர் வெளியே சென்ற கொஞ்ச நேரத்தில் அனைவருமே பாக்கியாவை பேச ஆரம்பித்து விட்டனர். மீண்டும் வீட்டிற்கு வரும் எழில் பாக்கியாவின் நிலையை பார்த்து விட்டு என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.

மேலும் அமிர்தாவுடன் முன்பை விட நெருக்கமாகவும் பழக ஆரம்பித்து விட்டார். அவர் வீட்டில் ஆரம்பத்தில் பிரச்னை இருந்தாலும் அமிர்தாவின் அத்தை மாமாவும் எழிலுடன் நெருங்கி பழக ஆரம்பித்து விட்டனர். எப்படியும் அமிர்தா தான் எழிலுக்கு ஜோடி என்று ஆகி விட்டது.

ஆனால் எப்படி ஒன்று சேர போகிறார்கள் என்பது தான் பெரிய குழப்பமே. இந்நிலையில் பாக்கியாவும் அவரின் வருங்கால மருமகள் அமிர்தா இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மாமியார் மருமகளின் ஒற்றுமை எந்த அளவிற்கு அழகாக உள்ளது என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here