அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி புறப்பட்டார்!!

0

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விமானத்தில் புறப்பட்டார்.

அயோத்தி அப்டேட்:

பிரதமர் நரேந்திர மோடி காலை 9:30 மணியளவில் அயோத்திக்கு புறப்பட்டார். அவர் முதலில் லக்னோவுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது, அங்கிருந்து அவர் ‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி’ பயணத்தை மேற்கொள்வார். பகவான் ராம் பிறந்தார் என்று பக்தர்கள் நம்பும் இடத்தில் அயோத்தியில் உள்ள பிரமாண்டமான கோயிலின் ‘பூமி பூஜை’ மதியம் 12:40 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது, இது அடிக்கல் நாட்டும் விழாவிற்கு ஒரு தொடக்கம் ஆகும்.

பிரதமர் மோடியுடன் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் 175 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள். இதனால் இதுவரை எங்கும் இல்லாத அளவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Yogi Adityanath
Yogi Adityanath

பிற்பகல் 12.30 மணிக்கு பூமிபூஜை தொடங்கி, சரியாக 12.40 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இருந்து புனித நீர் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2 மணிவரை பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி புறப்படுகிறார். அதற்கு முன்னதாக கோவிலின் முன்னாள் மோடி அவர்கள் பாரிஜாத பூவினை நட உள்ளார்.

மாதிரி படம் 1
மாதிரி படம் 1

கோவில் கட்டுமான பணிகள் இதன் பின்னர் தொடங்க உள்ள நிலையில் அதன் மாதிரி படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

மாதிரி படம் 2
மாதிரி படம் 2
மாதிரி படம் 3
மாதிரி படம் 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here