தமிழ் பெண்ணை கரம் பிடிக்கும் க்ளென் மேக்ஸ்வெல் – ஆஸ்திரேலியாவில் தமிழ் முறைப்படி நடைபெற்ற நிச்சயதார்த்தம்..!

0

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல், வினி ராமன் என்ற தமிழ்ப் பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். அவர்களின் நிச்சயதார்த்தம் தமிழ் முறைப்படி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன்:

ஆஸ்திரேலிய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று உலக அளவில் புகழ் பெற்றவர் மேக்ஸ்வெல். அதே நேரத்தில் தமிழகத்தை பூர்விகமாக கொண்டு மெல்போர்ன் நகரில் 1993 இல் பிறந்தவர் வினி ராமன். இவர் மருத்துவ அறிவியல் படித்து, அதே நகரில் பார்மசிஸ்ட் ஆக பணி புரிந்து வருகிறார். மேக்ஸ்வெல்லும் அதே நகரை சேர்ந்தவர் தான். இவர்களுக்கிடையே 3 வருடங்களுக்கு முன்பாக காதல் மலர்ந்தது.

இதற்கிடையில் அவர்கள் விடுமுறையின் போது அடிக்கடி டேட்டிங் மற்றும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கத்திய முறைப்படி மோதிரம் மாற்றி கொண்டனர். வினி ராமன் விருப்பப்படி இந்து முறைப்படி நிச்சயதார்த்தம் தற்போது நடைபெற்றுள்ளது.

அதில் இந்து கலாச்சாரத்தின் படி பாரம்பரிய உடை அணிந்து அனைவர்க்கும் விருந்தளித்து விழாவை சிறப்பித்தனர். அந்த புகைப்படத்தை வினி ராமன் வெளியிட்டுள்ளார். அதில் விழாவில் கலந்து கொண்டு எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் கல்யாண செய்தி விரைவில் அறிவிப்போம் என்று இருவரும் கூறியிருக்கின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here