உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதி போட்டி – முதல் அணியாக நியூஸிலாந்து தகுதி!! உள்நுழையுமா ஆஸ்திரேலியா??

0

உலக சாம்பியன்ஷிப்பிற்கான டெஸ்ட் போட்டியின் இறுதி போட்டிக்கு நியூஸிலாந்து அணி முதல் அணியாக தேர்வாகி உள்ளது. ஆஸ்திரேலியா அணி உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் தற்போது தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா:

தற்போது இந்தியாவிற்கு இடையேயான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போய்ட்டிகளை விளையாட இருந்தது. மேலும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20 போட்டியும் மற்றும் 2 டெஸ்ட் போட்டியும் விளையாட இருந்தது. உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா பங்கேற்க வேண்டும் என்றால் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதில் தற்போது ஓர் சிக்கல் எழுந்துள்ளது. அது என்னவென்றால் தென் ஆப்ரிக்காவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பரவிவருவதால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்கப்போவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பிற்காக செலவு செய்ய தயாராக உள்ளது. ஆனால் எங்களுக்கு வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம்.

நீட் போலி மார்க்சீட் வழக்கு – தந்தை, மகளுக்கு நிபந்தனை ஜாமீன்!!

ஆகவே தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவித்துள்ளது. தற்போது இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பங்கேற்க சிக்கல் எழுந்துள்ளது. மேலும் நியூஸிலாந்து அணி முதல் அணியாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் தேர்வாகியுள்ளது. இதன் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here