SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.,, அதிகரித்துள்ள FD வட்டி விகிதங்கள்!! முழு விவரம் இதோ!!

0
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.,, அதிகரித்துள்ள FD வட்டி விகிதங்கள்!! முழு விவரம் இதோ!!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.,, அதிகரித்துள்ள FD வட்டி விகிதங்கள்!! முழு விவரம் இதோ!!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) நிலையான வைப்பு விகிதங்களை (SBI FD விகிதம்) அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

SBI FD விகிதம்:

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அதன் நிலையான வைப்புத்தொகைகளின் (FDகள்) வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. மேலும் புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கு பொருந்தும். வங்கியின் இணையதளத்தின் படி, FDகளுக்கான அதிகரித்த வட்டி விகிதங்கள் (அக்டோபர் 15, 2022) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு வங்கி சில்லறை கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

SBI இப்போது ,7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FD களில், பொது மக்களுக்கு 3.00% முதல் 5.85% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.50% மற்றும் 6.65% வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்நிலையில், 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 2.90 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FD களுக்கான வட்டி விகிதம் 3.90 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆதார், பான் கார்டு வச்சிருக்கிறீங்க ரொம்ப உஷாரா இருக்கனும்.,, எக்காரணத்த கொண்டும் “இதை” செய்யாதீங்க!!

இந்தத் திருத்தத்தை தொடர்ந்து, 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 4.55 சதவீதத்தில் இருந்து 4.65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு முன்பு இருந்த 4.60% வட்டி விகிதம் இப்போது 4.70% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here