ஏன்மா.., ஆரம்பத்துலேயே இவளோ ஆட்டம் கூடாது.., விமர்சனத்தில் சிக்கிக்கொண்ட அதிதி சங்கர்!!

0
ஏன்மா.., ஆரம்பத்துலேயே இவளோ ஆட்டம் கூடாது.., விமர்சனத்தில் சிக்கிக்கொண்ட அதிதி சங்கர்!!

விருமன் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அறிமுக நடிகையான அதிதியின் இன்டெர்வியூ தான் இப்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது. முதல் படத்திலேயே தனது மொத்த திறமையை காட்டி விட்டார் அதிதி. நடிப்பையும் தாண்டி சிறந்த பாடகியாகவும் உருவெடுத்து வருகிறார்.

இன்ஸ்டாவை திறந்தாலே மதுரை வீரன் பாடல் தான் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் முதல் படத்திலேயே ரூ.25 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார். சங்கரின் மகள் என்பதால் தான் இவ்வளவு மவுசா என்று கூட நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எல்லா இன்டெர்வியூவிலும் அவரின் அதிகப்படியான செய்கையை பலரும் விமர்சித்து தான் வருகின்றனர். வந்த புதுசுலையே இவளோ ஆட்டம் கூடாதும்மா.., வசதி இருக்க இடத்துல எல்லாமே ஈஸியா கிடைச்சுரும்.., என்று இவரை கண்டபடி வசைபாட தான் செய்கின்றனர்.

ஒரு இடத்தில் புகழ் என்று கிடைத்தால் விமர்சனமும் வர தான் செய்யும். ஆனால் அதிதி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. இப்பொழுது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். விருமன் படம் அளவுக்கு வெற்றி கிடைக்குமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here