இந்திய அணியை தட்டி தூக்கிய இங்கிலாந்து.., அடுத்த ஆட்டத்தில் நடக்க போவது என்ன? ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

இந்திய அணிக்கு எதிரான முதல் T20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் உள்ளனர்.

இந்தியா VS இங்கிலாந்து!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் T20 ஆட்டம் இங்கிலாந்தில் நேற்று நடைபெற்றது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தனர். இதில் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா 29 பந்துகளில் 24 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 23 ரன்கள் எடுத்தார். பிறகு எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள், இந்திய பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 13 ஓவர் முடிவில் 9 விக்கெட் வித்தியாசத்தில் 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளனர். மேலும் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்து பெண்கள் அணி தற்போது அசுர பலத்தில் திகழ்வதால் இந்திய அணியின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here