புதுமனை புகுவிழாவில் பசுமாட்டை முதலில் அழைத்து வருவது ஏன்?? ஆன்மிக விளக்கம்!!

0

வீட்டில் கிரகபிரவேசம் செய்யும்பொழுது ஏன் முதலில் பசு மாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவார்கள் தெரியமா? கோ-மாதா என்று சொல்லப்படும் பசு மாட்டின் ஒவ்வொரு உடல் பாகத்திலும் தெய்வங்கள் இருக்கிறது. பசுவின் கால்பட்ட இடம் புண்ணியமாகும், தீய சக்திகள் விலகும், அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்பது உண்மை.

பசுமாட்டின் ஆன்மீக நன்மைகள்:

பஞ்சபூதங்கள் எனப்படும் பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் ஆகியவை பசுவிலிருந்தது பெறப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் விவசாயத்திற்கும், கோவில்களில் அபிஷேகம் செய்யவும், சில வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. அருகம்புல் சாப்பிட்டு போட கூடிய சாணத்தை உருண்டையாக திரட்டி காயவைத்து அதை உமியில் வேகவைத்தால் திருநீறு கிடைக்கிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படிப்பட்ட புனிதமான திருநீறை நெற்றியில் பூசும் பொழுது தீயசக்திகள் விலகும், நோய்கள் அண்டாது, நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு மந்திரத்தை பிரயாணம் செய்யும்பொழுது அதிக பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தினமும் காலையில் நீராடிய பின்பு நெற்றியில் திருநீறு அணிவதால் அன்றைய நாள் முழுவதும் உடலும், மனமும் தூய்மையாக இருக்கும்.

சிறந்த தானங்களில் ஒன்று பசுவிற்கு உணவு அளிப்பது. வாயில்லாத ஜீவனுக்கு உணவு கொடுத்தால் நம் தோஷங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் என்ன பாவங்களை செய்திருந்தாலும் சனிக்கிழமை அன்று பசுவை குளிக்க வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு, மாலை அணிந்து சிவப்பு துண்டு உடுத்து, சாம்பிராணி தூபமிட்டு அகத்திக்கீரையை உணவாக கொடுத்தால் நாம் செய்த பாவங்கள் முழுமையாக நீங்கிவிடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பசுவின் பாதம்பட்ட இடமெல்லாம் பரிசுத்தமாகும் என்பதால் புதுவீடு கட்டி முதன் முறையாக பால் காய்ச்சும்பொழுது பசுவையும், அதன் கன்று குட்டியையும் வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்கள். புது வீட்டிற்கு திருஷ்டி எதுவும் ஏற்படாது. பசுவை ஒரு கால்நடையாக மட்டும் எண்ணாமல் தெய்வமாக நினைத்து வழிபட்டால் வீட்டில் அனைத்து செல்வங்களும் நிறைவேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here