ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022: அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய வீரர்கள் அசத்தல்!!

0
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022: அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய வீரர்கள் அசத்தல்!!
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022: அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய வீரர்கள் அசத்தல்!!

ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சுமித் மற்றும் நரேந்தர் பதக்கத்தை உறுதி செய்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:

ஜோர்டானின் அம்மானில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 27 நாடுகளில் இருந்து, 267 வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், இந்தியா வீரரான சுமித் 75 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் போர்வொர்ன் கடம்துவானை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐந்து செட்டுகள் கொண்ட இந்த போட்டியில், இருவரும் தலா 2 செட்டை கைப்பற்றிய நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டுக்கு போட்டி நகர்ந்தது. இதில், இந்தியாவின் சுமித் அபாரமாக செயல்பட்டு 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் சுமித் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

ரோஹித் சர்மா கையை பதம் பார்த்த பந்து…, அரையிறுதியில் களமிறங்குவாரா?? மருத்துவ குழுவின் முடிவு என்ன??

இவர் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான உஸ்பெகிஸ்தான் ஜாஃபரோவ் சைட்ஜாம்ஷித்தை எதிர்கொள்ள இருக்கிறார். இது போன்ற மற்றொரு ஆட்டத்தில், 92 கிலோவுக்கு மேற்பட்ட எடை பிரிவில் இந்தியாவின் நரேந்தர், ஈரான் வீரரை எதிர்கொண்டார். இதில், நரேந்தர் 5-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இதன் மூலம், இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here