சந்தியாவை மட்டம் தட்டி பேசும் ஆதி.., மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் சிவகாமி.., ராஜா ராணி 2 எபிசோடு!!

0
சந்தியாவை மட்டம் தட்டி பேசும் ஆதி.., மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் சிவகாமி.., ராஜா ராணி 2 எபிசோடு!!
சந்தியாவை மட்டம் தட்டி பேசும் ஆதி.., மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் சிவகாமி.., ராஜா ராணி 2 எபிசோடு!!

ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோட்டில் புது திருப்பம் ஒன்று அரங்கேற உள்ளது. ஆதி ஜெசி அப்பாவிடம் பண உதவி கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார். பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை என கதவை தட்டுகிறார். ஜெசியின் அம்மா வந்து என்ன மாப்ள திடீர்னு இந்த பக்கம் வந்துருக்கீங்க என கேட்கிறார். ஆதி சும்மா பிரெண்ட பாக்க வந்தேன் அப்படியே உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன்னு சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிறகு அவர்களிடம் பணம் கேட்க தயங்கும் ஆதி நா பார்ட் டைம் ஜாப் க்கு ரெடி பண்றேன் ரொம்ப கஷ்டமா இருக்கு என பில்டப் பண்ணுகிறார். இதை கேட்டு ஜெசியின் அப்பாவும் நீங்க எதுக்கு கஷ்டப்படணும் எந்த உதவினாலும் என்கிட்ட கேளுங்க என பணத்தை கொடுக்கிறார். முதலில் பணத்தை வேணாம் என்று சொல்லும் ஆதி அப்புறம் வந்த வேலை முடிஞ்சுருச்சுனு பணத்தை வாங்கிக் கொள்கிறார். இந்த விஷயம் ஜெசிக்கு தெரிய வேணாம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

பிக் பாஸ் 6 : விக்ரமனின் முகத்திரையை கிழித்த அமுதவாணன்., கமல் சார் கிட்ட சிக்கினா அவ்வளவுதான்!!

அதன் பிறகு சரவணன் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சிவகாமி சந்தியா, பார்வதி இருந்தா நல்லா இருக்கும் என சொல்கிறார். பிறகு ஆதி சரவணனை இன்னும் டூட்டிக்கு போகலையா என கிண்டலடிக்கிறார். இதற்கு ஜெசி இப்போ என்ன டூட்டி என கேட்க அதற்கு ஆதி பார்ட் டைமா அண்ணி கூட போன் பேசுறதுனு சொல்கிறார். பிறகு எல்லாரும் சந்தியாவுக்கு ட்ரைனிங் எப்படி போது என கேட்கின்றனர்.

சரவணன் அதெல்லாம் சூப்பரா போதுனு சொல்கிறார். சிவகாமி எப்படியாவது என் மருமக நல்ல படியா பயிற்சிய முடிச்சுட்டு அந்த கோப்பைய ஜெயிக்கணும் என சாமி கும்பிடுகிறார். ஆனா ஆதி வழக்கம் போல் சந்தியாவால் முடியாது என மட்டம் தட்டி பேசுகிறார். இதற்கு எல்லாரும் ஆதியை திட்டுகின்றனர். பிறகு சரவணன் சந்தியாவுக்கு ஒரு கிப்ட் அனுப்பி வைக்கிறார். அதை வாங்கி கொள்ளும் சந்தியா, சரவணனுக்கு கால் செய்து நா ரொம்ப லக்கி என சந்தோஷமாக இருவரும் பேசிக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here