ஆசிய கோப்பை 2022 – சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று தொடக்கம்.., இந்தியா இறுதி போட்டிக்குள் நுழையுமா?

0
ஆசிய கோப்பை 2022 - சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று தொடக்கம்.., இந்தியா இறுதி போட்டிக்குள் நுழையுமா?
ஆசிய கோப்பை 2022 - சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று தொடக்கம்.., இந்தியா இறுதி போட்டிக்குள் நுழையுமா?

ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு எத்தனை போட்டிகள்..!

ஆசிய கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக அரங்கேறி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆறு அணிகள் பங்கேற்ற நிலையில் தகுதி சுற்று போட்டியிலே வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறி விட்டனர். இந்நிலையில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளனர். இதற்கான சூப்பர் 4 ஆட்டங்கள் அனைத்தும் இன்று தொடங்க உள்ளது. அதன்படி சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைத்தொடர்ந்து நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் களம் காண உள்ளனர். இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும். இதனால் இந்த சூப்பர் 4 ஆட்டங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிய கோப்பை தொடருக்கான ஆட்டங்கள் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தையும் தொடர்ந்து வரும் 11ஆம் தேதி ஞாயிறு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here