அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. மீண்டும் தலைதூக்கும் கொரோனா – 500 பேருக்கு தொற்று உறுதி!

0
அதிகரிக்கும் நோய் தொற்று எதிரொலி - கொரோனாவால் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு? மக்கள் பதற்றம்!
அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. மீண்டும் தலைதூக்கும் கொரோனா - 500 பேருக்கு தொற்று உறுதி!

உலக நாடுகள் அனைத்திலும் பரவி அச்சுறுத்தி வந்த கொரோனா, கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கிய நகரில் 500 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு உறுதி:

நம் அண்டை நாடான சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வூகான் என்ற நகரில் இருந்து கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ், உலகின் 150க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ்கான தடுப்பூசி, கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வருவதாக பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. சீனாவின் முக்கிய நகரான, சிச்சுவான் மாகாணத்தில் 3 நாட்களில் மட்டும், 500 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு, வருகிற செப்.4 ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்கள் தவிர  மற்ற பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரத்தில், ஆரம்பித்திருக்கும் இந்த வைரஸின் நிலை குறித்து உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here