இதுவரை யாரும் பார்க்காத திரில்லர்.., ஆர்யாவின் அடுத்த “வில்லேஜ்”.., ட்ரைலரை வெளியிட்ட படக்குழு!!

0
ஆர்யாவின் அடுத்த "வில்லேஜ்" ட்ரைலரை வெளியிட்ட படக்குழு

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஆர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து மிலன் இயக்கத்தில் உருவாகியுள்ள “வில்லேஜ்” வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

அமேசான் பிரைம் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஆர்யா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த “வில்லேஜ்” வெப் சீரிஸின் ட்ரைலரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு ட்ரைலர் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இப்படம் நவம்பர் 24ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here