முதல் தோல்வியை சந்தித்த அர்செனல் – வெற்றிக்கு தடை போட்ட யுனைடெட்!

0
முதல் தோல்வியை சந்தித்த அர்செனல் - வெற்றிக்கு தடை போட்ட யுனைடெட்!
முதல் தோல்வியை சந்தித்த அர்செனல் - வெற்றிக்கு தடை போட்ட யுனைடெட்!

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அர்செனல் அணியை முதன்முதலாக வீழ்த்தியுள்ளது.

அர்செனல் VS மான்செஸ்டர்!

இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசனில் சிறப்பாக ஆடிவரும் அர்செனல் அணி இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் கோல் அடித்து தொடர் வெற்றியை சந்தித்து வந்தனர். இந்நிலையில் அர்செனல் அணி, நேற்று மான்செஸ்டர் யுனைடெட்  அணியை எதிர்கொண்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடுமையான ஆட்டம் நடைபெற்று வந்தது. இதனால் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறி வந்தனர். இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்  அணிக்காக அன்டோனி (35) மாா்கஸ் ராஷ்ஃபோா்டு (66) ஆகியோா் தொடர் கோள்களை பதிவு செய்தனர். இதன்பின் சுதாரித்துக் கொண்ட அர்செனல் அணி வீரர்களான புகாயோ சகா (60) முதல் கோலை பதிவு செய்தார்.

ஆனாலும் விடாமுயற்சியுடன் விளையாடிய மான்செஸ்டர் அணி மீண்டும் கோலை பதிவு செய்தனர். இதன் மூலம் போட்டியில் இறுதியில் மான்செஸ்டர் அணி 3 – 1 என்ற கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணி முதல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here