தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 5ம் தேதி விடுமுறை., ஆட்சியர் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 5ம் தேதி விடுமுறை., ஆட்சியர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 5ம் தேதி விடுமுறை., ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில் ஸ்தலங்களில் ஆண்டுதோறும் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் விசேஷ ஆராதனையை காண திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். மேலும் இந்நாட்களில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொதுமக்கள் குலதெய்வ கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் காலையும் மாலையும் லிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனை என பல்வேறு சிறப்பு பூஜைகள் இடம்பெறும். இதன் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறந்து விளங்கிய வீரர்கள்…, டாப் 5 லிஸ்ட் இதோ!!

அன்று நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வருவார்கள். இதனால் ஏப்ரல் 5ம் தேதி நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரி, மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இருப்பினும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பொதுத்தேர்வு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here