வாரத்துல 3 நாள்தான் ஆபீஸ்.. இனி ஜாலியா வாங்க… ஆப்பிள் கொடுத்த ஆஃபர்!!!

0

ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஊழியர்களை செப்டம்பர் மாதத்தில் இருந்து  வாரம் மூன்று நாட்கள் மட்டும் அலுவலகம் வருமாறு கூறியுள்ளது. இந்த செய்தியை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தால் பெரும்பாலான அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். கொரோனாவின் கோரப்பிடிக்கு மத்தியில் ஐடி துறையில் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையில் தற்போது பல நிறுவனங்களும் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்று நிலையை ஏற்படுத்தி வருகின்றன.

 

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் , அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில் வாரத்தில் மூன்று நாட்களில் அலுவலம் வந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான ஊழியர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், அந்நிறுவன ஊழியர்களை ஜூன் மாதத்திற்குள் திரும்பி அலுவலகம் வர அழைப்பு விடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் கொரோனா முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை தாக்கத்தை ஏற்படுத்தியதால் அம்முடிவு கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் ஆப்பிள் ஊழியர்கள் வாரத்தின் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here