பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!!

0

ஆந்திர பிரதேச மாநில அரசு ஜூன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்ட 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக இன்று அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜூன் மாதம் 7 முதல் 16 ஆம் தேதி வரை ஆந்திராவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தன. கோவிட்-19 இரண்டாவது அலை மற்றும் மாநிலத்தில் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாநில கல்வித் துறை அதிகாரிகள் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கைகளை விடுத்தனர். இதனால் மாணவர்களின் நலன்கருதி மாநில அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தற்போது ஒத்திவைத்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கக் கோரி ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திர மாநில இடைநிலைக் கல்வி வாரியம் (BIEAP) தேர்வுகளை ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்கக் கோரி பல மாணவர்கள் change.org என்ற ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டனர்.  மேலும் மாணவர்கள் தேர்வுகளை ஒத்திவைக்க சமூக ஊடகங்களில் பல ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

நாட்டில் பல மாநிலங்கள் தங்கள் வாரிய தேர்வுகளை ஒத்திவைத்த போதிலும் ஏப்ரல் 29 அன்று, ஆந்திர மாநில இடைநிலைக் கல்வி வாரியம்,  அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டது. தற்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மீண்டும் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் ஆலோசிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here