பொறியியல் தரவரிசை பட்டியலில் அதிர்ச்சி – 2 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சிபெறவில்லை!!

0
anna university
anna university

சமீபத்திய பொறியியல் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில் அதிர்ச்சிகரமான கல்லூரிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களும் சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல் வெளியீடு:

சமீபத்திய பொறியியல் மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது.

மெட்ரோ நிலையங்களுக்கு பெயர் மாற்றம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

 engineering results
engineering results

அதில், ஏராளமான கல்லூரில் மாணவர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுஇருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன காரணம்:

அதில், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஒரு மாணவர் கூட 2 கல்லூரிகளில் தேர்ச்சிபெறவில்லை, மேலும் சில கல்லூரிகளை 20 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்று உள்ளனர், மாணவர்கள். 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற கல்லூரிகள் 2 தான் என்றும் கூறப்படுகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதற்கு, காரணங்களாக போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, தரமான ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏற்ற உபகரணங்கள் இல்லாதது போன்றவைகளே காரணம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here