Friday, April 26, 2024

ஆன்லைன் மூலம் இறுதியாண்டு தேர்வுகளா?? – அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!!

Must Read

கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலமாக வைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்த நிலையில், பள்ளி தேர்வுகள் கல்வித்துறை சார்பில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருந்து வந்ததால், தமிழக அரசு அதனை ரத்து செய்ய தயங்கி வந்தது.

ஆகஸ்ட் 16 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

online exams for final year students
online exams for final year students

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன், கல்ல்லூரி பயிலும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து, மற்ற அனைவர்க்கும் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தற்போது கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து இருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு:

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த முடிவு செய்து உள்ளது. இந்த தேர்வுகளுக்கு மென்பொருள் தயாரித்தலுக்கு பல்கழகத்தின் சார்பில் டெண்டர் ஒன்றும் கோரப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -