நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

2
anna university
anna university

கொரோனா அச்சம் காரணமாக, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக, தேர்வு நடந்தது. தற்போது, நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

60 மதிப்பெண்

கொரோனா தொற்று மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையும் தாண்டி, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக, தேர்வு நடந்தது. அரியர் மாணவர்களின் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நவ.26ம் தேதி தேர்வு துவங்க உள்ளது. 60 மதிப்பெண்களுக்கான தேர்வு ஒரு மணி நேரம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களும், ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத வேண்டும். கடந்த செப்டம்பரில் நடை பெற்ற இறுதி செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறு தேர்வு எழுதி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 COMMENTS

  1. Not interested while conduct exam on online. Nothing we studied. There is no preparation for exam. We are not properly atten the class also.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here