கொரோனா நிதியாக ஒரு நபருக்கு 44 ஆயிரம் வழங்கப்படும் – அதிபர் அறிவிப்பு!!

0

தற்போது அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவதற்காக புது மசோதா பிறப்பித்துள்ளது. இதனை அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்கர்கள் அனைவர்க்கும் தங்களது வாழ்வாதாரத்துக்கு இந்த நிவாரண பணம் உதவும் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்கா:

கடந்த 2019ம் ஆண்டில் சீனாவிலிருந்து கொரோனா என்னும் வைரஸ் ஒன்று பரவியது. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து. இந்த வைரஸில் இருந்து இன்னும் ஒரு நாடு கூட முழுவதுமாக மீளவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. மேலும் கொரோனா பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. அங்கு சுமார் 2 கோடி மக்களுக்கு மேல் கொரோனால் பாதிப்படைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் உயிர் இழந்தோர்களின் பட்டியலிலும் அமெரிக்கா நாடே முதல் இடத்தை பிடித்துள்ளது. அங்கு சுமார் 3.41 லட்சம் மக்கள் உயிர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அமெரிக்காவில் கொரோனா கான தடுப்பூசிகள் போடும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரோனாவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் அமெரிக்கா நாட்டவர். மேலும் கொரோனாவின் நிவாரண தொகைக்காக சுமார் 900 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்து புது மசோதாவை நிறைவேற்றியது.

donald trump
donald trump

ஆனால் இதனை ஏற்க டிரம்ப் மறுத்தார். ஏனெனில் இதனால் வெளிநாட்டவர் பெரிதும் பயனடைவர் என்று கருதி மசோதாவில் கையெழுத்து இடாமல் இருந்தார். இதனால் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அவர் கூறியதாவது அமெரிக்கர்கள் ஒவ்வருவருக்கும் சுமார் 2 ஆயிரம் டாலர் நிவாரணமாக கொடுக்கவேண்டும் என்று கூறினார். அதாவது இந்தியா கணக்கின் படி ஒரு நபருக்கு சுமார் 1 லட்சத்தி 47 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால் தற்போது ஒரு நபருக்கு 600 டாலர் இந்தியா மதிப்பின் படி சுமார் 44 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதியாக வழங்கப்படும் என்ற மசோதாவில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here