2021 இல் வர இருக்கும் 4 கிரகணங்கள் – இந்தியாவில் தெரியுமா??

0

வரும் 2021 ஆம் ஆண்டில் 4 கிரகணங்கள் நடைபெறும் என்றும் மேலும் அதில் 2 கிரகணங்கள் மட்டுமே இந்தியாவில் தென்படும் என்றும் வானிலை ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

2021ல் நிகழும் கிரகணங்கள்:

தற்போது நாம் 2020கான முடிவுக்கு வந்துள்ளோம். இன்னும் சில தினங்களில் புதிய வருடம் பிறக்கவிருக்கிறது. மேலும் தற்போது அடுத்த ஆண்டில் நிகழும் கிரகணங்களின் பற்றிய விவரங்களை வானிலை ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் அறிவித்துள்ளார். சூரியனுக்கும், பூமிக்கும் நேர்கோணத்தில் சந்திரன் வரும் இதனை தான் நாம் சூரிய கிரகணம் என்று கூறுகிறோம். மேலும் இந்த நிகழ்வின் போது பல தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் வெளியாகும். இதனால் மக்கள் யாரும் வெளியே செல்லமாட்டார்கள், மேலும் சமையல் செய்யவும் மாட்டார்கள் கிரகணம் முடிந்த பின்னரே சமைத்து சாப்பிடுவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அடுத்த ஆண்டு 4 கிரகணங்கள் ஏற்படும் என்றும் அதில் 2 கிரகணங்கள் மட்டுமே இந்தியாவில் தென்படும் என்றும் அறிவித்துள்ளார் வானிலை ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ். மேலும் அவர் கூறியதாவது வரும் 26ம் தேதி அன்று பூரண சந்திர கிரகணம் நிகழும் என்றும், இதனை மேற்குவங்கம், ஒடிசா கடற்கரை மற்றும் வடமாநிலங்களில் தென்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் வரும் ஜூன் 10ம் தேதி வருடாந்திர சூரியகிரகணம் நிகழும். இது 94.3 சதவீதம் சூரியனை மூடி நெருப்பு வலயம் போல் காட்சியளிக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இதனை இந்தியாவில் காண இயலாது என்று கூறியுள்ளார். நவம்பர் மாதம் 19ம் தேதி சந்திரகிரகணம் நிகழும் இதனை அருணாச்சல பிரதேஷ் மற்றும் அசாம் பகுதிகளில் காண இயலும் , மேலும் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி பூரண கிரகணம் நிகழும், இது 97.9 சதவீதம் பூமியின் நிழலால் சந்திரன் மூடப்பட்டிருக்கும் என்றும், மேலும் இதனையும் இந்தியாவில் காண இயலாது என்றும் கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here