அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணத்துக்கு ரெடியாகும் 82 வயது பாட்டி – யார் இவர்??

0

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு செல்ல உள்ளது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது அவருடன் விண்வெளிக்கு 82 வயதான பெண் விமானி வாலி ஃபங்க் என்பவரும் செல்ல உள்ளார்.

வரும் 20 ஆம் தேதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸ் அவர்களின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் பயணிகளுடன் கூடிய முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பயணத்தில் ஜெஃப் பஸாஸ், அவரது சகோதரர் மார்க் பஸாஸ் ஆகியோருடன் 82 வயதான வாலி ஃபங்க் என்பவரும் செல்ல உள்ளார்.

தற்போது வாலி ஃபங்க் அவர்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே 1961 ஆம் ஆண்டு விண்வெளிக்குப் பெண்களை அனுப்பும் திட்டம் ஒன்றை வைத்திருந்தது நாசா. இதற்காக 13 பெண்களைத் தேர்வும் செய்தது. அந்த 13 பெண்கள் கொண்ட அணியில் வாலியும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 21. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த 13 பெண்கள் யாரும் விண்வெளிக்கு செல்லவில்லை.

தற்போது வாலி அவர்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. அவர் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உடன் விண்வெளிக்கு பயணிக்கவிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here