இந்தியாவில் 20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு அளிக்கும் அமேசான் நிறுவனம்..!

1
amazon
amazon

உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதற்காக இந்தியாவில் அமேசான் நிறுவனம் 20,000 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமேசான் இந்தியா:

உலக நாடுகளில் பிறப்பிக்கப்பட்டு உள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வெளியே செல்ல அஞ்சுவதால், ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் வேலை ஆட்களை குறைத்து வரும் வேளையில், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் புதிதாக ஆட்களை பணியமர்த்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம், வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Amazon
Amazon

அந்த வகையில் இந்தியாவில் முக்கிய நகரங்களான ஹைதராபாத், புனே, கோவை, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய 13 நகரங்களில் தற்காலிகமாக 20 ஆயிரம் பேருக்கு 6 மாதம் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டு உள்ளது. இதில் அதிகமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. படிப்புத் தகுதியாக குறைந்தபட்சம் 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் எனவும், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் சரளமாக பேசும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.

ஸ்பைசியான ” இறால் பிரை” – வீட்ல செஞ்சு அசத்துங்க..!

பணியமர்த்தப்படும் வேலையாட்கள் அவர்களின் திறன், வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து சம்பளம் வழங்கப்பட உள்ளது. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here