அரசு பள்ளிகள் குறித்து வெளியான முக்கிய செய்தி – பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர் அவசர கடிதம்!!

0
மாநிலத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை? மாணவர்களுக்கு தீயாய் பரவும் கொரோனா! அரசு திடீர் முடிவு!!
அரசு பள்ளிகள் குறித்து வெளியான முக்கிய செய்தி - பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர் அவசர கடிதம்!!

நாட்டில் 10 லட்சம் அரசு பள்ளிகளை மறுசீரமைப்பிற்கான திட்டத்தை தயாரிக்குமாறு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மோடிக்கு கடிதம்:

நாட்டிலுள்ள 14, 500 அரசு பள்ளிகளை நவீன மயமாக்கும் திட்டத்தை  பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவருக்கு கடிதம் எழுதிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுவதும் உள்ள 80 சதவீத அரசு பள்ளிகள் குப்பை கிடங்குகளை விட மோசமாக மாறி உள்ளதாகவும், இவைகளை மேம்படுத்தும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

நாட்டில் உள்ள 27 கோடி மாணவர்களில், 18 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால், இவர்களுக்கான நவீன வளர்ச்சி என்பது மிகவும் குறைவு. வெறும் 14, 500 அரசு பள்ளிகளை மட்டும் நவீனமயமாக்க திட்டம் வகுத்தால் போதாது. நாட்டில் 10 லட்சம் அரசு பள்ளிகளையும் மறுசீரமைப்பிற்கான திட்டத்தை, மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here