தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை! தீவிரமாகும் சோதனை!!

0
ரேஷன் கடை பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் - அரசின் அறிவிப்பால் குஷியில் ஊழியர்கள்!!

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, அரசு தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர் குறித்து விசாரிக்க ஊழியர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

போலி ரேஷன் கார்டு:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாநில உணவு வழங்கல் துறை பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக, மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது.  தற்போது தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகளை, பரிசோதிக்கும் செயலில் ஊழியர்கள் இறங்கியுள்ளனர். ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண், கைரேகை, முகவரி மற்றும் விவரங்கள் அனைத்தும் சரியானதா? என பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும், அட்டையில் உள்ள நபர்கள் மட்டுமே பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாத காலமாக 13 லட்சத்து 12 ஆயிரம் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் பெறாமல் இருப்பதாகவும், அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த பரிசோதனை மூலம் போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here