இனி விண்வெளிக்கும் டூர் போகலாம்.. மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!

0

உலகிலேயே முதல் முறையாக ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து சென்றுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸ் இந்த பணி குறித்த ஆரம்ப அறிவிப்பை வெளியிட்டது. தற்போது இந்த மூன்று நாள் விண்வெளி பயணம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய காலங்களில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வது இன்ப உலா சென்று வரும் நிகழ்வை போல மாறி நிற்கிறது. சில நாட்களுக்கு முன்பு கூட அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் தனது சகோதரர் உடன் விண்வெளி பயணம் மேற்கொண்டார். மேலும் பிரான்சன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் என உலகத்தின் பெரும் பணக்காரர்கள் தற்போது இந்த தொழிலில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

முன்பெல்லாம் விண்வெளி வீரர்கள் ஆய்வு பணிக்காக பயணம் மேற்கொள்வது வழக்கம். தற்போது தனியார் நிறுவனங்களின் முயற்சியால் அனைவரும் விண்வெளிக்கு செல்வது சாத்தியமாகி உள்ளது. அந்த வகையில் எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் மனிதர்களை Falcon 9 என்ற ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

இந்த திட்டத்திற்கு “இன்ஸ்பிரேஷன் 4” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த Falcon 9 ராக்கெட்டில் பேராசிரியர் சியான் ப்ரொக்டர், ஹேலி ஆர்செனோக்ஸ், கோடீஸ்வரர் ஐசக்மேன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி ஆகியோர் விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here