மறந்திட மட்டும் மறந்தேனே… ஐஸ்வர்யா பிரிவை ஏற்க முடியாமல் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்???விமர்சிக்கும் ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியில் டாப் சீரியல்கள் வரிசையில்  முதன்மை வகிக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணனாக நடித்து வருபவர் சரவண விக்ரம். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் ஒருவராக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். இவர் மற்றும் ஐஸ்வர்யாவின் ரகசிய திருமணம் தொடர்பான கதையை மையமாகக் கொண்டு தான் தற்போதைய கதை நகர்கிறது.

இந்நிலையில் கண்ணனின் இந்த செயல் மூலமாக அவரின் அம்மா லட்சுமி மிகுந்த வேதனையில் இருக்கிறார். மேலும் இதனால் அவருக்கு உடல் நலமும் சரியில்லாமல் போகிறது. இதையடுத்து நேற்றைய எபிசோட்டில் லட்சுமியின் உயிர் பிரிகிறது. இதை அறியாத கண்ணன் வேலை நிமித்தமாக திருச்சி சென்றுவிடுகிறார். இவ்வாறு பல சோகமான காட்சிகளுடன் கதை போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இதில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா தனிப்பட்ட ஒரு சில காரணங்களால் தற்போது இந்த சீரியல் விட்டு விளக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து இது குறித்து அவர் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தனது வேதனையை தெரிவித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடித்து வந்த கண்ணன் என்ற சரவண விக்ரம் அவர் விலகியதில் இருந்து சோகமாக ரீல்ஸ் செய்வது அதற்கு கேப்சன் வைப்பது என இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அது போன்ற ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சோகமான முகத்துடன் ஜீவா நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளுக்கு வாயசைத்து ரீல்ஸ் செய்துள்ளார். அவரின் இந்த ரீல்ஸ் வீடியோ பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா விலக்கியதால் இவர் சோகத்தில் இருக்கிறார் என்பது போன்று விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here