வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும்- இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரை.!

0

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்திய வங்கிகள் சங்கத்தில் பல புதிய விதிமுறைகளை வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.

144 தடை உத்தரவு


பல மாநிலங்களில் சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சில இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் வர்த்தகம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

வங்கிகளின் விதிமுறைகள்

வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.சில வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி,பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள் மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடைபெறும்.புதிதாக நகைக்கடன் வழங்குவது, புதிய வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகள் இனி நடைபெறாது. இத்தகைய விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.சில வங்கிகள் இந்த விதிமுறைகளை பின்பற்ற ஒரு சில நாட்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது .

எல்.ஐ.சி. காப்பீட்டு பற்றிய தகவல்கள்

கொரோனா வைரஸ் பாதிப்புகளால் எல்.ஐ.சி. காப்பீட்டுதாரர்கள் தங்கள் பிரீமியம் தொகையை செலுத்த ஏப்ரல் 15-ந்தேதி வரை அவகாசம் அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.ஆனால் இப்போது நடப்பில் உள்ள காப்பீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். காலாவதியான பாலிசிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது எனவும், ஏப்ரல் 15-ந்தேதி வரை இணையதளம் வழியாகவும் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here