அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் – அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!

0
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK61 படத்தில், மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 அதிரடி அப்டேட் :

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, 3 வது முறையாக இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். Ak61 என்ற பெயரிடப்படாத தனது அடுத்த படத்தில், இவர் இரண்டு கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாகவும், அதனால் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும், இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

தற்போது இந்த படத்தில், இவருக்கு நாயகியாக நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் கமிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை, அவரே ஒரு பேட்டியில் தெரிவித்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள், மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here