ஆப்கானிஸ்தானில் சிங்க பெண்கள் – தாலிபான்களுக்கு எதிராக காபூலில் தீவிர போரட்டம்!!

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் தற்போது தாலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை ஆட்டி படைத்த தலிபான்களால் பெண்களின் சுதந்திரம் ஒட்டு மொத்தமாக பறிக்கப்பட்டது. அப்போது பெண்களுக்கு மனித உரிமைகள் மறுக்கப்பட்டன, கல்வி உரிமை மறுக்கப்பட்டது, வேலைக்குச் செல்ல முடியாது.

இதனால் அஞ்சி பெண்கள் பெண்கள் தற்போது தங்கள் குடும்பத்தாருடன் இடம் விட்டு புலம் பெயர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள் என்ற எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதால், பெண்களின் சுதந்தரம் பறிக்கப்படும் என்று முழக்கம் எழுப்பி தாலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here