ஆங்கில பாடலுக்கு பட்டைய கிளப்பிய சூர்யா பட நடிகை…!வாயடைத்து போன ரசிகர்கள்!!!

0

தமன்னா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறவைப்பதில் தவறுவதில்லை. அந்த வகையில் ஒரு ஆங்கில பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சாந்த் சே ரோசன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்தவர் நடிகை தமன்னா. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழை பொறுத்தவரை ஒரு வில்லியாக அறிமுகமாகியவர். அதன் பிறகு அவர் நடித்த வியாபாரி மற்றும்  கல்லூரி படங்கள் அவருக்கு தமிழ் திரையில் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. அதன் பிறகு அவர் ரசிகர்களின் பேராதரவோடு பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். தமிழ் மொழியோடு நில்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.

மேலும் இவர் குடும்பப்பாங்கு, மாடர்ன் மற்றும் கவர்ச்சி என பல தோற்றங்களிலும் பட்டைய கிளப்பியவர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை மிகுந்த அளவில் கவர்ந்து வருகிறது. தற்போது அவர் ஒரு ஆங்கில பாடலுக்கு நடனம் ஆடி பட்டைய கிளப்பிய வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ பகிர்ந்த சில மணிநேரத்திற்க்கு உள்ளாகவே வைரலாவதோடு பல லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here