புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை – எப்பொழுது எப்படி என்ன செய்ய வேண்டும்!!!!

0
புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை - எப்பொழுது எப்படி என்ன செய்ய வேண்டும்!!!!
புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை - எப்பொழுது எப்படி என்ன செய்ய வேண்டும்!!!!

பிரதமர் மோடியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற புதிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் புதிய மத்திய அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்று மோடி அவர்கள் அறிவுரை கூறினார்.

மோடி புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை…

இந்தியாவில் மோடியின் ஆட்சி இரண்டாம் முறையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படாமல் இருக்கின்றது, எனவே கடந்த ஜூலை 7 ஆம் தேதி மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்து விரிவாக்கம் செய்யப்பட்டது. பல துறைகளில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன. அதில் தமிழக்தின் பாஜக கட்சி தலைவர் எல்.முருகனுக்கு இணை மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. அவருக்கு மீன், கால்நடைத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறைகளின் பொறுப்புகள் மத்திய அரசு வழங்கப்பட்டது. இதன் பின் நேற்று மாலை முதல் முறையாக புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொளி வாயிலாக அமைச்சர்களை சந்தித்தார்.

மோடி புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை...
மோடி புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை…

அப்பொழுது அமைச்சர்களுக்கு மோடி அவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும், அதுமட்டுமில்லாமல் அமைச்சர்கள் தங்களது அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் பணிக்கு செல்ல வேண்டும், முறையாக நேர்மையாக வேலைகளை செய்ய வேண்டும், மக்கள்களின் நலனில் அதிகம் கவனம் தேவை என்று அறிவுரைகளை கூறினார், இத்துடன் கொரோனா காலத்தில் மக்களை எப்படி பேணி காக்க வேண்டும். மக்கள் சிலர் இன்னும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கிறார்கள். அதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா இல்லை என்ற எண்ணம் இல்லாமல் கொரோனா இருக்கிறது அதை எப்படி விரட்ட வேண்டும் என்று முறையான நடவடிக்கைகளை எடுங்கள் என்றும் கூறினார்.

மோடி புதிய அமைச்சர்களுக்கு காணொளி மூலம் அறிவுரை...
மோடி புதிய அமைச்சர்களுக்கு காணொளி மூலம் அறிவுரை…

அதுமட்டுமில்லாமல் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது எப்படி கையாளுவது, முடிவெடுக்க வேண்டும் போன்ற சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் மூத்த அமைச்சர்கள் அல்லது ராஜினாமா செய்து ஒய்வு பெற்று வரும் அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறினார். நாம் செய்யும் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு போய் சேர வேண்டும் அவர்களும் நம் நல்லாட்சியினை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மற்றும் கேரளா மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகம் இருட்னது கொண்டே வருவது மிக மண வருத்தமளிக்கிறது எனவே தொற்றின் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here