ஒலிம்பிக்கையும் விட்டு வைக்காத கொரோனா.. டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்..

0
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு அவசரகால நிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டி நடப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல முக்கிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதில் ஒன்று தான் ஒலிம்பிக் போட்டியும். கடந்த முறை கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைப்பெற உள்ளன.

மதுரை சேர்ந்த பெண் 2021 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு - தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வு!!!

தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்  என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 12-ஆம் தேதியன்று தொடங்கும் இந்த அவசரநிலை ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார்.இதனால் ஒலிம்பிக்கை நேரில் காணலாம் என்று இருந்த உள்ளூர் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here