
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் ஸ்வர்ணமால்யா. இவர் அலைபாயுதே, எங்கள் அண்ணா, வெள்ளித்திரை, மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் நடிப்பதை தாண்டி நடனத்தில் ஆர்வம் கொண்ட பரதநாட்டிய கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
கடந்த சில வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வரும் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி நமக்கு ஷாக் கொடுக்கிறது. அதாவது தனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆனதாகவும் ஆனால் அந்த வாழ்க்கையில் விவாகரத்தில் முடிந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான இவர் தற்கொலை செய்ய முடிவெடுத்தாராம். ஆனால் இவருடைய தங்கை மனநல மருத்துவரிடம் இவரை அழைத்துச் சென்று, இவரது உயிரை காப்பாற்றி விட்டாராம் இப்படி தன் வாழ்க்கையில் தான் கடந்து வந்த கசப்பான விஷயங்களை மனம் திறந்து ஸ்வர்ணமால்யா பேசியுள்ளார்.
வாகன ஓட்டிகளே…, இனி இந்த நிற நம்பர் பிளேட் தான் இவங்க யூஸ் பண்ணனும்…, வெளியான முக்கிய தகவல்!!