தனது அப்பா பிறந்தநாளில் விலைமதிக்க முடியாத விஷயத்தை செய்த நடிகை சினேகா – என்ன தெரியுமா?

0
நடிகை ஸ்நேகா வீட்டில் நடந்த முக்கிய குடும்ப விழா - நேரில் வந்து கலந்து கொண்ட நடிகர் தனுஷ்!!

புன்னகை அரசி சினேகா நேற்று தனது தந்தை பிறந்தநாளை மிக வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். ரசிகர்கள் பலரும் சினேகாவை பாராட்டி வருகின்றனர்.

தந்தை பிறந்தநாள்:

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. அவர் நடிப்பு திறமையால் பல கோடி மக்களை தன் வசம் ஈர்த்தார். இதனை தொடர்ந்து நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஹான், அத்யாந்தா என இரு குழந்தைகள் உள்ளனர்.

தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் ஸ்னேகா, தனது தந்தையின் 70 வது பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடியுள்ளார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது தனது தந்தையின் 70-வது பிறந்தநாளில் சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்றுள்ளார்.

அந்த பிறந்தநாளை அவருக்கு ஸ்பெஷலாக மாற்றியுள்ளார். மேலும் ஷெல்ட்டர் ஹோமில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டியும், எல்லா குழந்தைகளுக்கும் சாக்லேட், உணவு ஆகியவற்றை பரிமாறி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here