சமந்தாவின் யசோதா திரைப்படம் வசூல் இத்தனை கோடியா? படுகுஷியில் படக்குழுவினர்கள்!!

0
சமந்தாவின் யசோதா திரைப்படம் வசூல் இத்தனை கோடியா? படுகுஷியில் படக்குழுவினர்கள்!!
சமந்தாவின் யசோதா திரைப்படம் வசூல் இத்தனை கோடியா? படுகுஷியில் படக்குழுவினர்கள்!!

நடிகை சமந்தா நடித்த யசோதா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

யசோதா திரைப்படம்:

திரையுலகில் நான் ஈ, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகவில்லை. தற்போது ஹரிஸ் நாராயணன் மற்றும் ஹரி சங்கர் ஆகிய இயக்குனர்களின் உருவாக்கத்தில் யசோதா திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவருக்கு வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பான் இந்திய படமாக நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அடடா.., என்ன அதிசயம் இது.., 30 வருடங்களுக்கு பின்னோக்கி சென்ற குஷ்பூ.., கொஞ்சம் கூட எதுவுமே மாறல!!

இப்படம் வெளியான முதல் நாளிலே உலக அளவில் 6.32 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மூன்று நாட்களில் 20 கோடி வசூலித்ததாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் 50 கோடியை அள்ளும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here