உடல் உறுப்புகளை தானம் செய்த 18 மாதக் குழந்தை.,, காக்கப்பட்ட 2 உயிர்கள்!!

0
உடல் உறுப்புகளை தானம் செய்த 18 மாதக் குழந்தை.,, காக்கப்பட்ட 2 உயிர்கள்!!
உடல் உறுப்புகளை தானம் செய்த 18 மாதக் குழந்தை.,, காக்கப்பட்ட 2 உயிர்கள்!!

மூளைச்சாவு அடைந்த 18 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில் 2 உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது.

உடலுறுப்பு தானம்:

அரசு சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது உடல் உறுப்பு தானம் என்பது நமது உடலில் உள்ள உறுப்புகளை, நம் இறப்பிற்கு பிறகு மற்றவர்களுக்கு தானமாக வழங்குவது தான். இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த 18 மாதக் குழந்தை, தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் வசித்து வந்த மஹிரா என்ற 18 மாத பெண் குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்து, தலையில் காயம் ஏற்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து சிகிச்சைக்காக அந்த குழந்தை புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறினர். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர்கள், குழந்தையின் உடலுறுப்புகளை தானமாக வழங்க பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதை ஏற்று அவர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

“தளபதி 67″ல் நைசாக ஜகா வாங்கிய பிரபல இயக்குனர்..,  சோகத்தில்  மூழ்கிய ரசிகர்கள்!!

அதன்படி, தானமாக பெற்ற குழந்தையின் கல்லீரல் 6 மாத குழந்தைக்கும், இரு சிறுநீரகங்கள் 17 வயது நோயாளிக்கும் பொருத்தப்பட்டன. மேலும் குழந்தையின் கண்களில் இருந்து எடுக்கப்பட்ட கருவிழிகள் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பாதுகாக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here